Direkt zum Hauptbereich

ஜிக்கி

ஜிக்கி

அருள்தாரும் தேவமாதாவே - ஞான சௌந்தரி..
வாராய் நீ வாராய் - மந்திரி குமாரி 
ராஜசேகரா என் மேல் மோடி செய்வதேனடா - அனார்கலி 
மானைத் தேடி மச்சான் வரப் போறான் - நாடோடி மன்னன்
மயக்கும் மாலைப்பொழுதே குலேபகாவலி
ஊரெங்கும் தேடினேன் ஒருவரை - தேனிலவு 
துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாண பரிசு 


நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்
யாரடி நீ மோகினி - உத்தம புத்திரன்
காதலென்னும் காவியம் - வட்டத்துக்குள் சதுரம்
நினைத்தது யாரோ - பாட்டுக்கொரு தலைவன்
ஒத்தையடி பாதில ஊரு சனம் - ராக்காயி கோயில்
வண்ண வண்ண சொல்லெடுத்து - செந்தமிழ்ப் பாட்டு 
ராத்திரி பூத்தது காட்டுரோஜா - தாயம் ஒண்ணு
நான் உன்ன நினச்சேன் - கண்ணில் தெரியும் கதைகள்

காற்றில் இழைந்து வரும்போது இவரின் குரல் மட்டும் மயக்கும் தனி வசீகரமாக மனதை என்னமோ செய்யும்.. அது சோக பாடலானாலும் சரி, துள்ளல் இசை பாடல் என்றாலும் சரி, ஜிக்கியின் குரல் வளம் தனியாகவே நம்மை பாதிக்கும்.. பெரும்பாலும் கிளப் பாடல்கள் பாடினாலும், ஒவ்வொன்றும் காதுகளை குளிரசெய்யும் தேன் சாரல் எனலாம். 

ஆந்திராவின் சந்திரகிரியை சேர்ந்த கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர் கிருஷ்ணவேணி 1937ல் பிறந்தார். சென்னை மயிலாப்பூரில் நடுத்தெருவில் குடிசை பகுதியில் வறுமையோடு வளர்ந்தார். 1943ல் ஆறு வயதில் பந்துலம்மா என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் பாடவும் செய்தார்.

கிருஷ்ணவேணி 6 வயது முதலே சங்கீதத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். பதினோரு வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசை சிகரம் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி படத்தில் குழந்தை ஞானசௌந்தரி பாடும் அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். அது 1948ஆம் ஆண்டு. பாடல் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் பாடினார்.

கிருஷ்ணவேணியின் குரலை கேட்ட இசைமேதை ஜி. இராமநாதன், குழந்தை குரலிது வேண்டாம், லீலாவை பாட செய்யலாம் என்ற பலரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது கிருஷ்ணவேணியின் 13வது வயதில், 1950 இல் மாடர்ன் தியேட்டர்ஸாரின் மந்திரி குமாரி படத்தில் வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே போன்ற பாடல்களை திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். அப்போது வேறு ஒரு பாடகி கிருஷ்ணவேணி என்று இருந்ததால் ஜிக்கி என பெயரும் மாற்றி அமைக்கப்பட்டது. பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் கசிந்தது. எல்லோருடைய வாயும் இந்த பாடலை முணுமுணுத்தது. அந்த வெற்றியானது 1950-1960 கலீல் ஜிக்கி எனும் பாடகியின் பொற்காலத்தை உறுதி செய்தது. எல்லா இசை அமைப்பாளர்களின் இசையிலும் இவரின் குரல் பயணம் தொடர்ந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், என எல்லா திராவிட மொழிகளிலும் பாடினார். 

1952 இல் திரை இசை திலகம் கே.வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். பிறகு சில படங்களிலும் இருவரும் இணைந்து பாடினர். அப்போது இருவருமே மிக பிரபலமான பாடகர்கள். தொடர்ந்து இவர்கள் பணியாற்றியபோது இடையே காதலும் வந்தது. மூன்று ஆண்டுகளாய் காதலை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து காத்திருந்தார். பின்னர் 1955ல் மகேஸ்வரி என்ற படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார். ஆனால் ஜிக்கி அந்த காதலை ஒத்துக்கொள்ளவில்லை...

தன் குடும்ப சூழலை சொல்லி, மிகப்பெரிய குடும்பத்தை தாங்கும் தனது வருமானம் தம்பி, தங்கைகளுக்கு அவசியம் என்று கூறி அந்த காதலை மறுத்தார். என்றாலும் ராஜா குடும்பத்தை தானும் கவனித்து கொள்வதாகவும் உறுதி அளித்தார். எனினும் 1952ல் சந்தித்து 1955ல் காதலை சொல்லி, மேலும் 3 ஆண்டுகள் கழித்து 1959ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிரபலமான இசை ஜோடிகளான ஏ.எம்.ராஜா, ஜிக்கி திருமணம் அந்நாளில் வெகு விமரிசையாகவும், பரபரப்பாகவும் நடைபெற்றது. 

Kommentare

Beliebte Posts aus diesem Blog

ஸ்வர்ணலதா

போறாளே பொன்னுதாயி பாடியவள் போயே விட்டாள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் போன்ற இசை அமைப்பாளர்களை தொடர்ந்து தேனிசை தென்றல் தேவாவுக்கு தொடர்ந்து பாடினார். இவரின் சிறப்பான பாடல்கள் பல தேவா இசையில் வெளியானது. மேலும் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா போன்ற எல்லாருடனும் பணி புரிந்தார். 
மிரட்டும் செளந்திரவல்லி! ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் "செளந்திரவல்லி'. நடிகைகள் மதுபாலா, மகேஸ்வரி, சுதா சின்னத்திரை பண்டிட்ஸ்! சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து தங்களது திறமையை வெளிப்படுத்திய நடிகர், நடிகைகளுக்குத் தங்களது பாடும் திறமையை வெளிப்படுத்தவும்  ஆட்களைத் தேடும் ஹரிஹரன்! இந்திய இசையில் சர்வதேச புகழ் பெற்ற ஹரிஹரன்,​​ தனது இசை அகடமிக்காக ஐந்து பேரை ஜெயா தொலைக்காட்சியில் மிகப்பெரிய "ரியாலிட்டி ஷோ' நடத்தி தேர்ந்தெடுக்க புதுப் படங்கள்! நடிகர் விஜயகாந்தின் "கேப்டன் டி.வி.' வருகிற ஏப்ரல் 14ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்குகிறது.​ இதற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்த "விதை'யில் சூர்யா! கடந்த பொங்கல் தினத்தன்று விஜய் டி.வி.யில் "ஒரு விதை - ஒரு கோடி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. "விதை' என்ற அந்தத் திட்டம் மூலம் நடிகர் சூர்யாவின் நெகிழ வைக்கும் மகான்! இந்த பூமியில் பிறக்கும் அனைத்து பிறப்புக்கும்  காரணம் உண்டு. மிகச் சிலரே தங்களது பிறப்பின் ரகசியங்களை