Direkt zum Hauptbereich

பி. ஜெயச்சந்திரன்



பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பாலியாத் ஜெயச்சந்திரகுட்டன்
பிறப்பு3 மார்ச்சு 1944
இரவிபுரம், கொச்சிபிரித்தானிய இந்தியா (தற்போதைய இரவிபுரம், எர்ணாகுளம்கேரளம்இந்தியா)
இறப்பு9 சனவரி 2025 (அகவை 80)
திருச்சூர், கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடுதல்
இசைத்துறையில்1965–2025
இணையதளம்www.jayachandransite.com

(மலையாளம்: : പി.ജയചന്ദ്ര൯, P. Jayachandran, 3 March 1944 – 9 January 2025)[1]) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும், தமிழக அரசின் திரைப்பட விருதை நான்கு முறையும் கேரள அரசின் திரைப்பட விருதை நான்குமுறையும் பெற்றுள்ளார். 1997 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

ஜெயச்சந்திரன் எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் புகழ்பெற்ற இசைக்கலைஞரும் கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்தவருமான இரவிவர்மா கொச்சனியன் தம்புரானுக்கும் சுபத்திரா குஞ்சம்மாவிற்கும் பிறந்தார். அன்னையின் தூண்டலால் ஆறு வயதிலேயே மிருதங்கம் வாசிக்கப் பயின்றார். எட்டு வயதில் கிறித்தவ தேவாலயங்களில் பக்திப் பாடல்கள் பாடத்தொடங்கினார். இரிஞ்சாலகுடாவில் வளர்ந்த ஜெயச்சந்திரன் அங்குள்ள தேசியப் பள்ளியில் படித்து வந்த நேரத்தில் பள்ளிப் போட்டிகளில் மிருதங்கம் மற்றும் மெல்லிசையில் பல பரிசுகளைப் பெற்று வந்தார். மாநில பள்ளிச்சிறுவர்களுக்கான ஒரு போட்டியில் 1958ஆம் ஆண்டு சிறந்த மிருதங்கக் கலைஞராகப் பரிசு பெற்றார். இதே போட்டியில் பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சிறந்த செவ்விசைப் பாடகராகத் தேர்வு பெற்றார்.

விலங்கியலில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு 1965 இல் ஜெயச்சந்திரன் சென்னை வந்து சேர்ந்தார்.

திரை வாழ்வு

[தொகு]

1965 இல் இந்திய பாக்கித்தான் போர் நிதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஜெயச்சந்திரன் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏ. வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர். எஸ். பிரபு ஆகியோர் ஜெயச்சந்திரனை அவர்களின் குஞ்சாலி மரக்கார் என்ற மலையாளப் படத்தில் பாட வைத்தார்கள். இப்படம் வெளிவரும் முன்னரே ஜெயச்சந்திரன் பாடிய களித்தோழன் படம் வெளி வந்தது. 1972ஆம் ஆண்டு "பணிதீராத வீடு" என்ற மலையாளத் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடிய நீலகிரியுடே என்ற பாடலுக்காக முதல் கேரள மாநில விருது பெற்றார்.1985ஆம் ஆண்டு "ஸ்ரீ நாராயண குரு" என்ற மலையாளத் திரைப்படத்தில் அவரது பாடல் சிவசங்கர சர்வ சரண்ய விபோ, தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றுத் தந்தது. ஏ. ஆர். ரகுமான் இசையில் கிழக்குச்சீமையிலே படத்தில் அவரது பாடல் கத்தாழம் காட்டுவழி தமிழ்நாடு மாநில திரைப்படவிருது பெற்றது.

1975ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர். கே. சேகர் இசையமைத்த "பெண்படா" என்ற மலையாளத் திரைப்படத்தில் வெள்ளி தேன் கிண்ணம் போல் என்ற இவரது பாடல், ஒன்பது வயதில் திலீப் சேகர் என்ற ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த முதல் பாடலாகக் கருதப்படுகிறது.

  1. 1973ம் ஆண்டு வெளியான அலைகள் தமிழ் படத்தில் ""பொன்னென்ன பூவென்ன பெண்ணே..."" என்ற பாடலை எம் எஸ் வி இசையில் அறிமுகம்.[2]

இவர் பாடிய பாடல்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்பாடல்.இசையமைப்பாளர்
1973மணிப்பயல்தங்கச்சிமிழ் போல்ம. சு. விசுவநாதன்
1973அலைகள்பொன்னென்ன பூவென்னம. சு. விசுவநாதன்
1974நான் அவனில்லைமந்தார மலரேம. சு. விசுவநாதன்
1976மூன்று முடிச்சுவசந்தகால நதிகளிலேம. சு. விசுவநாதன்
1978கிழக்கே போகும் ரயில்மாஞ்சோலைக் கிளிதானோஇளையராஜா
காற்றினிலே வரும் கீதம்சித்திரச் செவ்வானம்இளையராஜா
ஒரு வானவில்இளையராஜா
ஆறிலிருந்து அறுபது வரைவாழ்க்கையே வேசம்இளையராஜா
1980ஒரு தலை ராகம்கடவுள் வாழும்டி. ராஜேந்தர்
1981கடல் மீன்கள்தாலாட்டுதே வானம்இளையராஜா
அந்த 7 நாட்கள்கவிதை அரங்கேறும் நேரம்ம. சு. விசுவநாதன்
தென்றலது உன்னிடத்தில்
இரயில் பயணங்களில்வசந்த காலங்கள் இசைந்துடி. ராஜேந்தர்
1983சூரக்கோட்டை சிங்கக்குட்டிகாளிதாசன் கண்ணதாசன்இளையராஜா
1984அழகுமௌனமான மயக்கம்ஜி. கே. வெங்கடேசு
புதுமைப் பெண்காதல் மயக்கம்இளையராஜா
1985பகல் நிலவுபூவிலே மேடை நான்இளையராஜா
பிள்ளைநிலாஇராஜா மகள் ரோஜா மலர்இளையராஜா
நானே ராஜா நானே மந்திரிமயங்கினேன் சொல்லத் தயங்கினேன்இளையராஜா
நானே ராஜா நானே மந்திரிதேகம் சிறகடிக்கும்இளையராஜா
வைதேகி காத்திருந்தாள்காத்திருந்து காத்திருந்துஇளையராஜா
வைதேகி காத்திருந்தாள்இராசாத்தி உன்னஇளையராஜா
வைதேகி காத்திருந்தாள்இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமேஇளையராஜா
1986சம்சாரம் அது மின்சாரம்அழகிய அண்ணிசங்கர் கணேஷ்
அம்மன் கோவில் கிழக்காலேபூவ எடுத்துஇளையராஜா
புன்னகை மன்னன்கவிதை கேளுங்கள்இளையராஜா
கடலோரக் கவிதைகள்கொடியிலே மல்லியப்பூஇளையராஜா
மனக்கணக்குஎன் மணக்கூட்டு, சின்னம. சு. விசுவநாதன்
1987பூ பூவா பூத்திருக்குபூ பூத்த செடிய காணோம்டி. ராஜேந்தர்
சின்னபூவே மெல்லபேசுசின்னப்பூவே மெல்லபேசுஎஸ். ஏ. ராஜ்குமார்
1988செந்தூரப்பூவேசோதனை தீரவில்லமனோஜ் கியான்
மனசுக்குள் மத்தாப்புபூந்தென்றலேஎஸ். ஏ. ராஜ்குமார்
சொல்ல துடிக்குது மனசுஎனது விழிஇளையராஜா
ஊரை தெறிஞ்சுகிட்டென்தலத்துவன் கண்மணிகங்கை அமரன்
1989என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்புல்லைக் கூடஇளையராஜா
புருஷன்பூமுதித்து பொட்டுஇளையராஜா
ராஜநாதனைகஸ்தூரி மான்குட்டிம. சு. விசுவநாதன்
1990இணைந்த கைகள்"அந்திநேரத் தென்றல்"கியான் வர்மா
பச்சைக்கொடி"என்னவாது இந்த"கங்கை அமரன்
புதுப்பாடகன்"வாராயோ வந்த"கலைப்புலி எஸ் தாணு
புதுப்புது ராகங்கள்திருநாள் வந்ததடாஎஸ். ஏ. ராஜ்குமார்
உறுதிமொழி"அதிகாலை நிலவே"இளையராஜா
1991அர்ச்சனா ஐ. ஏ. எஸ்."நாலு வார்த்தை"எஸ். ஏ. ராஜ்குமார்
1992தெய்வ வாக்கு"ஊரெல்லாம் சாமியாக"இளையராஜா
எல்லைச்சாமி"ஊமை குயில் ஒன்று"எஸ். ஏ. ராஜ்குமார்
இதுதாண்டா சட்டம்"அழகான பூந்தோட்டம்"எஸ். பி. வெங்கடேஷ்
பொண்டாட்டி ராஜ்ஜியம்"உச்சிமர பச்சக்கிளியே"தேவா
பொண்ணுக்கேத்த புருஷன்"தேவதை வந்தாள்"இளையராஜா
சோலையம்மா"மேற்குத் தொடர்ச்சி"தேவா
1993கிழக்குச் சீமையிலேகத்தாளம் காட்டுவழிஏ. ஆர். ரகுமான்
1994காதலன்கொல்லையில தென்னை வைத்துஏ. ஆர். ரகுமான்
அத்த மக ரத்தினமேஅல்லி அல்லி தந்த நிலாகங்கை அமரன்
வண்டிச்சோலை சின்ராசுசித்திரை நிலவுஏ. ஆர். ரகுமான்
மே மாதம்என்மேல் வீசும்ஏ. ஆர். ரகுமான்
தாய் மாமன்ஆழ சமுத்திரம்தேவா.
1995பசும்பொன்அடி ஆத்தி நெஞ்சுவித்யாசாகர்
1996பூவே உனக்காகசொல்லாமலே யார் பார்த்ததுஎஸ். ஏ. ராஜ்குமார்
1998அவள் வருவாளாஇது காதலின் சங்கீதம்எஸ். ஏ. ராஜ்குமார்
நிலாவே வாகடலம்மாவித்யாசாகர்
2002கன்னத்தில் முத்தமிட்டால்கன்னத்தில் முத்தமிட்டால்ஏ. ஆர். ரகுமான்
சுந்தரா டிராவல்ஸ்மல்லிகைப் பூவுக்குபரணி
சுந்தரா டிராவல்ஸ்நீ சந்தனம் பூசியபரணி
பாபாஇராஜ்யமா இல்லைஏ. ஆர். ரகுமான்
2003சொக்கத்தங்கம்வெள்ளையாய் மனம்தேவா
2004எங்கள் அண்ணாகொஞ்சி கொஞ்சி பேசும்தேவா
2005மீசை மாதவன்காபூலிவாலாபரணி
வெற்றிவேல் சக்திவேல்என் செல்லக் கண்ணம்மாஸ்ரீகாந்த் தேவா
2007கிரீடம்கனவெல்லாம்ஜி. வி. பிரகாஷ்குமார்
2018அமுதாகண்ணாடி மலைஅருண் கோபன்
2020வன்முறைசின்ன பூசன்னி விசுவநாத்

இறப்பு

[தொகு]

கேரள மாநிலம் திருச்சூரில் தனியார் மருத்துவ மனையில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த ஜெயச்சந்திரன் தனது 80 அகவையில், 9 சனவரி 2025 அன்று காலமானார்.[3]

Kommentare

Beliebte Posts aus diesem Blog

இன்று பொன்விழா காணும் இசைக்குயிலுக்கு வாழ்த்துக்கள்! சின்னகுயில் சித்ரா என்றாலே இனிய குரலும், மலர்ந்த சிரிப்புமே நமக்கு நினைவில் வரும். 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் மேடை பாடகராக விளங்கிய கிருஷ்ணன் நாயருக்கும் வீணை மேதை சாந்தகுமாரிக்கும் இளைய மகளாக கேரளா திருவனந்தபுரத்தில் சித்ரா பிறந்தார்.

ஜிக்கி

ஜிக்கி அருள்தாரும் தேவமாதாவே - ஞான சௌந்தரி.. வாராய் நீ வாராய் - மந்திரி குமாரி  ராஜசேகரா என் மேல் மோடி செய்வதேனடா - அனார்கலி  மானைத் தேடி மச்சான் வரப் போறான் - நாடோடி மன்னன் மயக்கும் மாலைப்பொழுதே குலேபகாவலி ஊரெங்கும் தேடினேன் ஒருவரை - தேனிலவு  துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாண பரிசு  நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்
  இளையராஜாவுக்கு யார் போட்டி ? ** தேரோட்டம் நடக்கும் சாலை என்றாலும் அதிலும் எல்லா வண்டிகளும் போகத்தானே செய்யும் ? இளையராஜா திரையிசையமைப்பில் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் அவரோடு போட்டி போட்டு இசையமைத்தவர்கள்