Donnerstag, 10. Oktober 2013

ஸ்வர்ணலதா

போறாளே பொன்னுதாயி பாடியவள் போயே விட்டாள்

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் போன்ற இசை அமைப்பாளர்களை தொடர்ந்து தேனிசை தென்றல் தேவாவுக்கு தொடர்ந்து பாடினார். இவரின் சிறப்பான பாடல்கள் பல தேவா இசையில் வெளியானது. மேலும் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா போன்ற எல்லாருடனும் பணி புரிந்தார். 


தனது இனிமையான குரலால் ரசிகர்களை மயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். தனது பெரிய குடும்பத்தை காக்க திருமணம் தடையாக இருக்கலாம் என்றே திருமணத்தை தள்ளி போட்டார் என்கிறார்கள். 

ஒருமுறை தனது இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இந்திப்படமான மொகலே ஆசம் படம் (இந்த படம் தமிழில் "அனார்கலி" என்ற பெயரில் வெளியானது). அந்த இந்திப் படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்ற கவாலி போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். இப்போட்டிப் பாடலை இரு வெவ்வேறு குரல்களில் சொர்ணலதா, சங்கர் கணேசின் இசையமைப்பில் மேடையில் பாடினார்.

சொர்ணலதாவின் இந்த திறமையை கேட்ட இசை அமைப்பாளர் நவ்ஷாத் அலி பாராட்டினார். அத்துடன், தன்னுடைய மோதிரத்தையும் சொர்ணலதாவுக்கு விருதுபோல வழங்கினார். அது ஸ்வர்ணலதாவின் மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சியாக அமைந்தது. 

2010 ஆரம்பம் வரை ஸ்வர்ணலதா பாடிக்கொண்டே இருந்தார். கூட அவரது நுரை ஈரல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்ப்பட்டது. பாடுவதை குறைத்தார். சிகிச்சை தொடர்ந்தது. காலன் செவி இல்லாதவன் போலும், ஸ்வர்ணலதா பாடியது போதும், என்று துரத்தி வந்தான். இருப்பினும் ஊதுவத்தியின் கடைசி புகையும் வாசமாகவே இருப்பதை போல, ஸ்வர்ணலதா கடைசி வரை பாடிக்கொண்டிருந்தார் தனிமையில். 

அந்த நாளும் வந்தது. ஒரு இனிய குயிலை கொள்ளை கொண்டு போன நாள். 12-09-10 காலை அவர் வீட்டில் இருந்தபோது திடீரென சுவாச பிரச்சினையால் தொண்டை வலி ஏற்பட்டது. இதனால் அவரை சிகிச்சைக்காக சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி இசையோடு கலந்து போனார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. 

பாடகி ஸ்வர்ணலதாவின் மறைவு செய்தி கேட்டு சோகமடைந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். 

மல்லிகை மறைத்தாலும் வாசம் மறையாது என்பார்கள், ஸ்வர்ணலதா என்ற இனிய குயில் பறந்து விட்டது. அவர் கூவிய கீதங்கள் இன்னும் ஒலிக்கிறது நம்மிடையே. எங்கோ இன்னும் கசிகிறது 

"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் ......" 

நீ சாகவே முடியாது .... 

Keine Kommentare:

Kommentar veröffentlichen