Direkt zum Hauptbereich
பாடும்போது நான் தென்றல் காற்று ....
4 ஜூன் 1946ல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொனேட்டம்மா பேட்டையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவே இந்திய சினிமா உலகின் கந்தர்வ குரலோன் என்பது யாருக்கும் அப்போது தெரியாது. குழந்தைக்கு பாலசுப்ரமணியம் என்று பெயரிட்டனர்.
தந்தை ஹரிகதா பாடும் ஒரு எளிய பக்தி பாடகர். தந்தையிடம் இருந்து ஹார்மோனியம், குழல் வாசிக்க அந்த குழந்தை கற்று கொண்டது. பாலுவின் தங்கை சைலஜாவும் பாடுவதில் தேர்ச்சி பெற்றார்.

பள்ளிக்கல்வி முடித்து அனந்தபூர் JNTU பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது டைபாய்டு காய்ச்சல் வந்ததால் படிப்பை பாதியில் நிறுத்தினார். பாடுவதில் பெருவிருப்பம் கொண்ட அவர், 1964ல் நடைபெற்ற இளம்பாடகருக்கான இசை போட்டியில் முதல் பரிசு பெற்றார். பாடுவதே தன் தொழில், அதற்கே தாம் பிறந்தது என்று தெரிந்து கொண்ட அவர் சென்னை வந்தார். ஆம், நம் பாடும் நிலா பாலு 1964ல் சென்னை வந்தார்.

முதல் பாடல் வாய்ப்பை திரு கோதண்டபாணி அவர்களிடம் பெற்றார் (நன்றி மறவாத பாலு , கோதண்டபாணி பெயராலே தனது இசை ஸ்டுடியோவை ஆரம்பித்தார்) முதல் பாடலுக்கு பிறகும் உடனடியாக வாய்ப்பு வரவில்லை, மிகுந்த சிரமங்களுக்கிடையே பாடல் வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார். பழைய சைக்கிளில் கோடம்பாக்க பகுதிகளில் திரிந்து வாய்ப்பு தேடினார். இசைமேதை கோதண்டபாணியும் அவருக்காக பலரிடம் சொல்லி வைத்தார். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு இசை சக்கரவர்த்தி விஸ்வநாதன், ராமமூர்த்தி அவர்களின் இசையில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் LR ஈஸ்வரியுடன் பாடினார். அந்த படம் வெளிவரவே இல்லை. பிறகே சாந்தி நிலையம், அடிமை பெண் படங்களுக்கு பிறகு பாலு தென் இந்திய சினிமாவில் குறிப்பிடதக்க பாடகர் ஆனார். பலகாலமாக பாடி வந்த TMS அவர்களின் குரலை விட இளமையான இனிய குரல் தேடிக்கொண்டிருந்த எம்.ஜி.யார், சிவாஜி போன்றவர்களுக்கு பாலுவின் குரல் அருமையாக பொருந்தியது. கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, ஷங்கர் கணேஷ் என எல்லா இசையமைப்பாளர்களிடமும் பாடினார். சுசீலா, ஜானகி, வாணிஜெயராம் என எல்லோரிடமும் இணைந்து தென் இந்திய அனைத்து நடிகர்களுக்கும் பாடினார்.

பாடும் எந்திரம் என்று எல்லோரும் கூறுவதைப் போல ஓய்வு ஒழிச்சல் இன்றி பாடினார். 1977களுக்கு பிறகு இசைஞானி இளையராஜா சகாப்தம் தொடங்கியது. இளையராஜா, எஸ்.பி.பி, எஸ்.ஜானகி கூட்டணி அமைந்தது. ரேடியோவை அந்த காலகட்டத்தில் திருப்பினால் போட்டாலே 10 பாடலில் 6 பாடல் இவருடயதாகவே இருக்கும். எல்லா வித பாடல்களையும் எளிமையாக பாடிக்கொண்டிருந்தார். தமிழ், தெலுங்கு.கன்னடம், ஹிந்தி என கிளை விரித்து பாடினார். பாடல்கள் தொடர்ந்தன, விருதுகள் குவிந்தன, தேன் குடித்த வண்டாய் ரசிகர்கள் இவர் குரலில் மயங்கினர். பாடிக்கொண்டே இருந்தாலும் யாருக்கும் இவர் குரல் அலுக்கவில்லை. (40000) நாற்பதாயிரம் பாடல்களை தாண்டி பாடிக்கொண்டே இருக்கிறது இந்த இனிய குரல். இதற்க்கு முன்னரும் யாரும் இத்தனை பாடியது இல்லை, இனிமேலும் எவரும் இத்தனை பாட முடியாது என்ற உச்சத்தில் அமர்ந்து கூவுகிறது இந்த குயில்.

இளையராஜா பிரபலமாவதற்கு முன்பு எஸ்.பி.பி.யின் இசைக்குழுவில் வாசித்து கொண்டு இருந்தார் என்பதால், ஒருவரை ஒருவர் வாடா, போடா என்று கூப்பிட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்குமிடையில் நட்பு. இருந்து வந்தது.இளையராஜா, எஸ்.பி.பி. கூட்டணியில் காலத்தால் அழியாத பல பாடல்கள் வெளிவந்தன. யாட்லிங் செய்வதுகுரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் வேண்டியது போல மாற்றிப் பாடுவது, பாடும்போதே சிரிப்பது, கிண்டல் தொனிக்கப் பாடுவது என்று வர்ணஜாலங்களையும் பாட்டில் வெளிப்படுத்தக் கூடியவர் எஸ்.பி.பி

நாற்பதாயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் ஒரே பாடகர் எஸ்..பி.பி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் பாலு.. . இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார் இதுவும் ஒரு சாதனை. . இந்திய அரசால் இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் அளிக்கப்பட்டது.

மினசாரகனவு,(தமிழ்) ஏக் துஜே கேலியே,(ஹிந்தி) சங்கீத சகர கனயோகி(கன்னடம்) சாகரசங்கமம், ருத்ரவீணை,சங்கராபரணம் (தெலுங்கு) போன்றவை இவர் தேசிய விருது பெற்ற படங்கள். நியாயமாக பார்த்தல் ஸ்வாதி முத்யம், காதல் ஓவியம், நினைவெல்லாம் நித்யா, என ஒரு டசன் விருதாவது கிடைத்திருக்க வேண்டும். எல்லாம் அரசியல் மாயம் தான்.

பாடுவதை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் நடித்தும் புகழ் பெற்றவர் பாலு. சிகரம், கேளடி கண்மணி படங்களில் ஹீரோ. 50 படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றவர். காதலன், மனதில் உறுதி வேண்டும், அவ்வை சண்முகி, குணா என வெற்றி படங்கள் அநேகம். முதல் மரியாதை படத்தில் சிவாஜி பாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் இவரே. பாரதிராஜா பலமுறை வற்புறுத்தியும் பலர் வேண்டியும், ஹீரோ-வாக அப்போது நடிக்க மறுத்து விட்டார். பின்னர் தான் சிவாஜி நடிக்க வந்தார்.

துடிக்கும் கரங்கள் எனும் ரஜினி படம் தொடங்கி, சிகரம், தையல்காரன், மயூரி என 5 மொழிகளில் 60 படங்களுக்கும் மேலாக இசை அமைத்து இருக்கிறார். வண்ணம் கொண்ட வெண்ணிலவே, சந்தனம் பூச மஞ்சள் நிலா.. போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை.

தெலுங்கு படங்களில் நிறைய பாடல்களை எழுதியவர். ராப் வகை பாடல்கள் எழுத இவருக்கு ஸ்பெஷல். பாடலாசிரியர்கள் வராத பல நேரங்களில் பாடல்களை இவர் எழுதியதுண்டு.

ஏக் துஜே கேலியே-வின் தேரே மேரே பீச் மே .. பாடல் ஹிட்டுக்கு பின் ஹிந்தியில் ஒரே நாளில் 19 பாடல் பாடி பதிவு செய்தார். இது ஒரு உலக சாதனை இதுவரை யாரும் இதை முறியடிக்கவில்லை. மழை படத்துக்காக ஒரு பாடல் பாடல் வந்தார். உள்ளே நுழைந்தது முதல் பாடி முடித்து வெளியேறும் வரை அவர் ஸ்டுடியோவில் இருந்தது 12 நிமிடங்களே. இதுவும் ஒரு சாதனை. எந்த பாடலையும் கேட்டு இன்னும் மெருகேற்றுவது இவர் தனி ஸ்டைல். 

இவரை வியந்து சச்சின் பேட்டில் கை எழுத்து இட்டு கொடுத்து இருக்கிறார். இவருடன் பாடுவது சீனியர் பாடகர்களுக்கு சந்தோசம், இளம் தலைமுறை பாடகர்களுக்கு பாடம். இவர் இருக்கும் இடமே மகிழ்ச்சி பொங்கி இருக்கும். எந்த ஈகோவும் இல்லாத குழந்தை இவர்.மூச்சு விடாமல் பாடுவது கூட இவருக்கு எளிது. "சத்தம் இல்லாத தனிமை, மண்ணில் இந்த காதல்" போன்றவை சாட்சி. குரலை பாதுகாக்க எந்த கஷ்டமும் படுவது இல்லை, ஐஸ் கிரீம் உள்ளிட்ட எல்லாமும் சாப்பிடுவார். சுத்த சைவம் 

ரஷ்யா தவிர அனைத்து நாடுகளுக்கும் சென்று வந்தவர். கடந்த 20 வருடங்களில் அதிக முறை விமான பயணம் செய்த பயணிகளில் இவரும் முக்கியமானவர். எஸ்.பி.பி. மிக அருமையாக புல்லாங்குழல் வாசிப்பார். இன்றும் இரவுகளில் இவர் வீடு ஜன்னல்களில் புல்லாங்குழல் இசை கசிவதைவதை கேட்கலாம்.

அமெரிக்க அதிபர் கிளிண்டனை பாலுவும் லதா மங்கேஸ்கரும் சந்தித்த போது, கிளிண்டன் லதாவை பார்த்து நீங்கள் தான் அதிக பாடலை பாடியவரா என்ற போது லதா "இல்லை, இல்லை பாலு தான் 30 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடியவர் (அப்போது 30 ஆயிரம்) என்று கூற, உடனே கிளிண்டன் வியந்து பாலுவிடம் "முப்பது ஆயிரம் பாடல்களா? பிறகு எப்போது தூங்கினீர்கள்? சாப்பிடீர்கள் என கேட்க பாலுவும் "இல்லை எங்கள் நாட்டில் பாடுவது சுலபம், எங்கள் இசை அடித்தளம் அப்படி என்று விளக்கினார்.

சாவித்திரி என்ற மனைவி, சரண், பல்லவி என்ற மகன், மகள். இருவருமே நல்ல பாடகர்கள். பல்லவி திருமணமாகி அமெரிக்காவிலும், சரண் பட தயாரிப்பாளராகவும் உள்ளார்.

யாருமே இனி செய்ய முடியாத அசுர சாதனைகளை செய்துவிட்டு இன்னமும் அமைதியாக, ஒரு குழந்தையாக வாழ்ந்து வருகிறார். உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமை அய்யா! இதை காலம் சொல்லும். 

"எம்மா எம்மா காதல் பொன்னம்மா" காதில் கேட்கிறது .... காலம் கடந்து வாழ்கிறாய் நீ நிலவைப்போல ....

Kommentare

Beliebte Posts aus diesem Blog

first nightukkum last nightukkum enna vithiyasam poovai poddu mele padutha  1 st  namakku poovai poddu apdutha  last sempila mansi paal kondu vantha 1  sempila makan paal kondu vanatha last ................................................... kallakathalukkum  nallakatahlukkuim  poiddu vada enda  nalla  kathal poidaru vaada enda  kallakathal 

ஸ்வர்ணலதா

போறாளே பொன்னுதாயி பாடியவள் போயே விட்டாள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் போன்ற இசை அமைப்பாளர்களை தொடர்ந்து தேனிசை தென்றல் தேவாவுக்கு தொடர்ந்து பாடினார். இவரின் சிறப்பான பாடல்கள் பல தேவா இசையில் வெளியானது. மேலும் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா போன்ற எல்லாருடனும் பணி புரிந்தார்.