Direkt zum Hauptbereich
இசையரசி S.ஜானகி
இசையரசி S.ஜானகி, இந்தியாவின் மிகச்சிறந்த பின்னணி பாடகி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இருபதாயிரம் பாடலுக்கும் மேல் 18 மொழிகளில் பாடிய பெருமை பெற்றவர். தைர்யமாக தனது குரல் பாதிக்குமோ என்று கூட அஞ்சாமல்

பல வித்தியாச குரலில் அசத்தியவர். 80 வயது கிழவி, 5 வயது குழந்தை, ஆண்மகன் குரல் என்று வித்தியாசமாக பாடும் ஒரே இந்திய மொழி பாடகி. பாடலாசிரியர், இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

சவாலான பாடல்கள் என்றால் இவருக்கு மிகுந்த விருப்பம், கர்நாடக சங்கீத பாடல்களை அனாயாசமாக பாடும் இவர், சில்க் ஸ்மிதா போன்றவர்களுக்கு பாடிய கிளப் பாடல்களும் மக்களால் பெருதும் விரும்ப படுபவை. ஒரே மாதிரியான குரல் அமைப்பை கொண்டு பாடாமல் எல்லா மொழிகளிலும் பிழை இன்றி தெளிவாக பாடும் திறன் கொண்டவர். அதிக டேக் வாங்காமல் தான் பாடுவதே தெரியாத வண்ணம் பாடுவதில் திறமைசாலி.

குழந்தை உள்ளமும், அற்புதமான குரல் வளமும் கொண்ட இசை தேவதை இவர் என்றால் அது உண்மையே. புதிதாக பாடவரும் அல்லது இசை அமைக்க வரும் எல்லாரும் இவரோடு பனி புரியவே விரும்புவார்கள் காரணம் சொல்லி கொடுப்பதிலும் இவர் வல்லவர். அன்னக்கிளியில் இவர் பாடதொடங்கும்போதே மின்சாரம் கட் ஆக அதை அபசகுனமாக கருதிய தயாரிப்பாளர்கள் இளையராஜா அவர்களை நீக்கி விடலாம் என்ற போது, அவருக்காக திருமதி ஜானகி பாடல்கள் ரொம்ப நல்ல இருக்கு, இது ஒன்றும் பெரிய விசயமில்லை என்று பரிந்து பேசினார். அதனாலோ என்னவோ இளையராஜாவின் ஆஸ்தான பாடகியாய் விளங்கினார். தென் இந்தியாவில் 1977 முதல் 1992 வரை பதிவு செய்யப்படும் பாடல்களில் பாதிக்கும் மேற்ப்பட்ட பாடல்கள் இவருடயதாகவே இருக்கும்.

இசையரசி ஜானகி, ஆந்திரமாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற கிராமத்தில் ராமமூர்த்தி, சத்தியவதி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். சிறு வயதிலேயே பாட்டின் மீது விருப்பம் அதனால் கேட்டதை எல்லாம் உள்வாங்கி பாடத்தொடங்கி விட்டார். அப்போது நாதசுர மேதை திரு பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர் தன மாமாவின் துணையோடு சென்னைக்கு வந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் சேர்ந்து சினிமாவில் நுழைந்தார்.

1957 ஆம் ஆண்டில் வெளியான விதியின் விளையாட்டு என்ற படத்தில் வந்த பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவருக்கு முதல் பாடல். மறுநாளே ஜானகிக்கு எம்எல்ஏ என்ற தெலுங்குப் படத்தில் மேதை கண்டசாலாவுடன் இணையாக பாடினார். தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன், ஏஎம்.ராஜா இசையில் பல பாடல்கள் பாடினார். கொஞ்சும் சலங்கை படத்தின் சிங்காரவேலனே பாடல் யாருமே காரகுருச்சி அருணாசலம் அவர்களின் நாகஸ்வர இசையோடு பாட முடியாது என்ற போது, பாடகி திருமதி பி.லீலா ஜானகியால் மட்டுமே இப்பாடலை பாட முடியும் என்ற போது ஜானகி பாடினார். இசை உலகமே அதற்க்கு பின் அவரை கொண்டாடியது. ஸ்ரீதரின் எல்லா படங்களிலும் ஜானகி பாடினார். எல்லா கதாநாயகியருக்கும் பாடினார். எல்லா இசை அமைப்பாளருக்கும் பாடினார். ஓய்வு ஒழிச்சல் இன்றி எல்லா மொழியிலும் பாடினார். 

நெல்லூரில் ஒரு பாட்டு போட்டிக்கு நீதிபதியாக சென்ற போது, மற்ற இரு நீதிபதிகளும் ஒரு சிறுவனுக்கு முதல் பரிசை தர, இவரோ ரெண்டாவதாக வந்த சிறுவனை தட்டி கொடுத்து எனக்கு இவர் பாடியதே பிடித்து இருந்தது எனக்கூறி பரிசளித்தார். நீ படிச்சிட்டு சென்னை வா, சினிமாவில் பாடலாம் என்று சொல்லி விட்டு வந்தார். அவரும் பின்னர் சென்னை வந்து பாடினார். பெரும் புகழ் பெற்றார். அவர் திருமதி ஜானகியோடு அதிகம் பாடிய எஸ்.பி.பி தான்லதா, நான் எல்லாருமே அந்த பாட்ட பாட முடியதுன்னு சொல்லிட்டோம், காரகுரிச்சி நாதஸ்வரத்துக்கு பாடுறது ரொம்ப கஷ்டம், ரொம்ப தைர்யமா அந்த பாட்ட பாடி, ஒரு ஆயிரம் வருசத்துக்கு பேர் சொல்ற மாதிரி பாடி காட்டிட்டா ஜானகி, அவ என் தங்கை மாதிரின்னு சொல்லிக்கறதுல எனக்கு பெருமை - லீலா

நாங்க வார்த்தைக்கு வார்த்தை தான் expression அம்மா மட்டும் தான் எழுத்துக்கு எழுத்து expression தருவாங்க, அவங்க பாடும்போது உதடாவது அசையுமாநு உத்து பாப்போம்.. இல்ல சிலை மாதிரியே பாடுவாங்க.. சிலை உறுகுற மாதிரி பாடுவாங்க.. S.P.B

எங்க எல்லாரையும் மாதிரி கூட ஜானகி பாடுவாங்க, ஆனா அவங்க மாதிரி ஒரு experession கூட எங்களால பண்ணமுடியாது. அது தான் ஜானகி - லதா மங்கேஷ்கர்.

என்ன பார்க்கும்போதெல்லாம் நீ வயித்துல பொறக்காம போயிட்டியேனு சொல்வாங்க.. ஆனாலும் என் அம்மா தான் அவங்க.. நிறைய பாட்டு நான் பாடி இருந்தாலும் எப்போவும் என் பெஸ்ட் பாட்டு "ஊரு சனம் தூங்கிருச்சி" தான். பாட்டுக்கு நடுவுல சிரிக்கறது, அழறது, சினுங்கறது இப்டி எல்லா விசயத்துக்கும் அம்மா தான் எனக்கு குரு - சித்ரா.

ஐயம் எ லிட்டில் ஸ்டார், கண்ணா நீ எங்கே, அப்படின்னு மழலை குரல்...
மச்சான் பேரு மாரின்னு ஆம்பள குரல்
போடா போடா போக்கே அப்படின்னு கிழவி குரல்
நேத்து ராத்திரி" அப்டின்னு சிலுக்கு குரல்
அழுகை, சிரிப்பு, லூசு குரல், ...
சாவித்திரி, தேவிகா, ஜெயலலிதா, ஸ்ரீதேவி, சிம்ரன், ப்ரீத்தி ஜிந்தா வரை ஒவ்வொருவருக்கும் ஒரு தனி குரல்னு ..
இப்படி ஒரு versatile வாய்ஸ் யாருக்காச்சும் இருந்து இருக்குமா?
ஒரு முறை பாலு சார் வர லேட் ஆச்சுனு அவருக்கு அவர் வாய்ஸ்ல "ட்ராக் பாடினாங்கலாம்" கிரேட் சிங்கர் .

ஜேர்மன் உள்ளிட்ட 16 மொழிகள், 20000 மேற்பட்ட சினிமா பாடல்கள், 1000க்கும் மேலான தனிப்பாடல்கள், 4 தேசிய விருது , எண்ணற்ற மாநில விருது, இனி யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத வானளாவிய சாதனை. இன்னமும் பாடிகொண்டிருக்கும் வரம் .. அம்மா நீ பாட ஆரம்பித்தாய் இந்தியாவில் குயில்கள் கூடு கட்ட மறந்து விட்டன.

மௌனபோராட்டம் என்று தமிழில் வெளியான தெலுங்கு படத்திற்கு இசை அமைத்தார். கண்ணா நீ எங்கே? பாடலை எழுதி மழலை குரலில் பாடினார். தனி பக்தி பாடல்கள் பல இசை அமைத்து எழுதி பாடி உள்ளார். 

சென்னை அபிராமபுரத்தில் வாழ்ந்து வரும் இந்த இசையரசி வி.ராம்ப்ரசாத் என்பவரை மணந்தார். இவரின் இந்த புகழுக்கும், வளர்ச்சிக்கும் அவரின் கணவரே துணையாக நின்றார். ஒரே மகன் முரளி கிருஷ்ணா, சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு பின் தற்போது இசை சம்பந்தமான தொழில் செய்து வருகிறார். மருமகள் உமா முரளிகிருஷ்ணா பரதநாட்டிய கலைஞர். பேத்திகள் அம்ருத வர்ஷினி, அப்சராவோடு இனிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். 

கண்டசாலா தொடங்கி சங்கர் மகாதேவன் வரையும், சுதர்சனம் தொடங்கி ரஹ்மான் வரையும் பல தலைமுறை கலைஞர்களோடு தொடர்ந்த பயணம். இன்னமும் நல்ல பாடல்கள் வந்தால் பாடுகிறார். டாக்டர் பட்டம் இருமுறை பெற்றவர். கலைமாமணி தொடங்கி பத்மபூஷன் வரை ..(இந்த விருதை மறுத்து வானளாவிய புகழ் பெற்றார்) எண்ணற்ற சாதனைகள். எண்ணில் அடங்காத இனிய பாடல்கள். இரவுக்கும், தனிமைக்கும் இவரது இனிய பாடல்கள் சுகமானவை.

அம்மா..
உன்னை படம் எடுக்க கேமெரா எடுத்தால் அது உன்னோடு பாட விரும்புகிறதாம்.
உன்னை பற்றி எழுத பேனா எடுத்தால் அது கேட்க விரும்புகிறதாம் ..
வாழ்க வளமோடு .. இனிய குரலோடு...

Kommentare

Beliebte Posts aus diesem Blog

first nightukkum last nightukkum enna vithiyasam poovai poddu mele padutha  1 st  namakku poovai poddu apdutha  last sempila mansi paal kondu vantha 1  sempila makan paal kondu vanatha last ................................................... kallakathalukkum  nallakatahlukkuim  poiddu vada enda  nalla  kathal poidaru vaada enda  kallakathal 
பாடும்போது நான் தென்றல் காற்று .... 4 ஜூன் 1946ல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொனேட்டம்மா பேட்டையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவே இந்திய சினிமா உலகின் கந்தர்வ குரலோன் என்பது யாருக்கும் அப்போது தெரியாது. குழந்தைக்கு பாலசுப்ரமணியம் என்று பெயரிட்டனர்.

ஸ்வர்ணலதா

போறாளே பொன்னுதாயி பாடியவள் போயே விட்டாள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் போன்ற இசை அமைப்பாளர்களை தொடர்ந்து தேனிசை தென்றல் தேவாவுக்கு தொடர்ந்து பாடினார். இவரின் சிறப்பான பாடல்கள் பல தேவா இசையில் வெளியானது. மேலும் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா போன்ற எல்லாருடனும் பணி புரிந்தார்.