Direkt zum Hauptbereich
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான ...
அவர் பாடிக்கொண்டிருந்தார், அது வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அஸ்ஸாம் பழங்குடி கிராமம். அவர்கள் மொழியிலேயே பாடி அவர்களை மெய் மறக்க செய்துகொண்டிருந்தார். பாடி முடித்ததும், அந்த மக்களால் ஒரு பாம்பு அவர் கழுத்தில் பரிசாக போடப்பட்டது.


அப்போது பஞ்சாப் பிரச்சினை இந்தியாவில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம், பஞ்சாப் பொற்கோவிலில் பஞ்சாபியிலேயே பாடினார். பாடி முடித்ததும் சிலர் அவரிடம் அழுதபடி இனி தீவிரவாத செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி கூறினார். இது எல்லாம் சினிமா காட்சிகள் அல்ல. 

இசைக்கு என்றே பிறந்த, 18 மொழிகளில் பாட மட்டும் அல்ல, 14 மொழிகளையும் நன்கு கற்று அர்த்தம் புரிந்து தெரிந்து கொண்ட வாணிஜெயராம் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்கள். 10000 சினிமா பாடல்கள், 3000 மேற்பட்ட தனி பாடல்கள். சங்கராபரணம், அபூர்வ ராகங்கள், சுவாதி கிரணம் படங்களுக்கு என்று 3 தேசிய விருதுகள். தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, ஒரிசா மாநிலங்களில் சிறந்த பின்னணி பாடகிக்கான பல விருதுகள். தென் இந்திய மீரா என்று சிறப்பு பட்டம் என எல்லாம் பெற்றும் அமைதியான பாடகியாய் இன்றும் இளமையான குரலோடு இசை மேடைகளை அலங்கரிக்கிறார் இந்த இசை வாணி.

தமிழ்நாட்டின் வேலூர் நகரில் நவம்பர் 30, 1945ல் பிறந்த தமிழ்ப் பெண் இவர். உண்மையான பெயர் கலைவாணி என்பதே. தாயார் பத்மாவதி வீணை வாசிப்பதில் பெரிய மேதை. ஆறு பெண்கள், 3 ஆண்கள் என ஒரு பெரிய குடும்பத்தில் 5ஆவது மகளாய் வாணி பிறந்தார். அக்காவுக்கு பாட்டு சொல்லி கொடுக்க வந்த கடலூர் ஸ்ரீனிவாச ஐயங்கார் வாணியின் இசை ஆர்வம் கண்டு அவருக்கும் சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். கர்நாடக சங்கீதத்தின் நீள, அகலங்களை கண்டு உணர்ந்து சங்கீத சாகரத்தில் நீந்த ஆரம்பித்தார். 8 வயதிலேயே அகில இந்திய வானொலியில் பாட ஆரம்பித்தார்.

கல்லூரி படிப்பு சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்தது. கல்லூரி தினங்களிலேயே பல பரிசுகள் இசைக்காக பெற்றார். பின்னர் ஜெயராம் அவர்களை மணந்துகொண்டு மும்பையில் வாழ் தொடங்கினார். அங்கு தான் வாணியின் திறமைகள் பளிச்சிட ஆரம்பித்தது. வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், கணவரின் ஒத்துழைப்போடு ஹிந்துஸ்தானி சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். பிரபல மேதை உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் இந்துஸ்தானி சங்கீத பயிற்சி பெற்றார். தினமும் 18 மணிநேர அசுர சாதகம், தும்ரி பஜன் மற்றும் கஜல் பாடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றார் வாணி.

குரு வியந்தார் அந்த சரஸ்வதி தேவியே பாடுவது போல உணர்ந்தார். 1969, மார்ச் 1ம் தேதி வாணி ஜெயராம் இசை அரங்கேற்றம் பொழிந்தார், மும்பை இசை மழையில் தத்தளித்தது. மும்பையின் அத்தனை சபாக்களும் வாணியிடம் தேதி கேட்டு காத்திருந்தன. இந்தி இசை அமைப்பாளர் வசந்த் தேசாய் ஹிந்தி சினிமாவில் பாட அழைத்தார். அந்த பாடல் பதிவு ஆனது. பின்னர் மாரத்தி பாடல் வாய்ப்புகள் பல வந்தன. இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜி, இசையமைப்பாளர் வசந்த் தேசாய் இணைப்பில் உருவான குட்டி திரைப்படத்தில் வாணியின் பாடல் வெளிவந்தது. அதன் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.

தேன் குடித்த வண்டாய் ரசிகர்கள் கிறங்கினர். பழைய கிழட்டு குரல்களை கேட்டு அலுத்து இருந்த ஹிந்தி சினிமா ரசிகர்கள் வாணியை கொண்டாடினர். அந்த படத்தில் பாடிய போலரே பப்பி ஹரா பாடப்பட நாட்களே இல்லை என்ற அளவு வானொலி பாடி களைத்தது. பினாகா சிறப்பு பாடலில் இந்த பாடல் தினமும் நம்பர் ஒன் பாடலாக சுமார் 4 ஆண்டுகள் ஒளிபரப்பானது . இந்த பாடல் 5 விருதுகளை அள்ளிச் சென்றது. தான்சேன் விருது கிடைத்தது. சுற்றிய இடமெல்லாம் பாராட்டு, ஏராளமான பாடல் வாய்ப்புகள். 

பாராட்டு வந்தால் எதிர்ப்பு வரமால் இருக்குமா? வந்தது. வாணியின் திறமை, வெற்றியைக் கண்டு இந்திக்காரர்களுக்குப் பொறாமை வந்துவிட்டது. மதராசி நம்மை வீழ்த்துவதா என்ற அவர்களின் வழக்கமான எண்ணம் அவருக்கு பல இடையூறுகளை தந்தது. வாணிஜெயராமை வைத்து எந்த இசையமைப்பாளர் பாட்டு எடுக்கிறாரோ, அவருடைய இசையமைப்பில் தான் பாடுவதில்லை என்று பிரபல இந்திப் பாடகி ஒருவர் (ஒருவர் என்ன ஒருவர் லதா மங்கேஷ்கர் தான்) ஸ்டிரைக் செய்தார். லதா, ஆஷா, போன்றவர்களின் கூட்டணியால் வாணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பத்திரிகைகள், ரசிகர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

மைக் இல்லாமலே 2 கிலோமீட்டர் வரை சத்தமாக பாடக்கூடிய வரத்தை இறைவன் வாணிக்கு தானே வழங்கி இருந்தான். எந்த மொழியிலும் தெளிவு, கர்நாடிக், ஹிந்துஸ்தானி என எல்லா இசையிலும் சிறந்த ஆளுமை என்பது அவர்களை உறுத்தியது போலும் ... எனினும் மராட்டி, ஒரிய வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன. நாம் செய்த தவமோ என்னவோ, திரை இசை சக்கரவர்த்தி விஸ்வநாதன் பார்வையில் பட்டார். தமிழில் நுழைந்தார். எல்.ஆர்.ஈஸ்வரிக்கு பிறகு தமிழில் பாடிய தமிழ் பெண் இவரே.

நாளை எம்.ஜி.யார் கட்டளை, கண்ணதாசன் பாராட்டு, முத்திரை பதித்த பாடல்கள், ஓவியம் வரைவது,, பாடல் எழுதுவது, இசை அமைப்பது என்ற இவரின் பல்வேறு திறமைகள், என தொடரும் ... 

Kommentare

Beliebte Posts aus diesem Blog

first nightukkum last nightukkum enna vithiyasam poovai poddu mele padutha  1 st  namakku poovai poddu apdutha  last sempila mansi paal kondu vantha 1  sempila makan paal kondu vanatha last ................................................... kallakathalukkum  nallakatahlukkuim  poiddu vada enda  nalla  kathal poidaru vaada enda  kallakathal 
பாடும்போது நான் தென்றல் காற்று .... 4 ஜூன் 1946ல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொனேட்டம்மா பேட்டையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவே இந்திய சினிமா உலகின் கந்தர்வ குரலோன் என்பது யாருக்கும் அப்போது தெரியாது. குழந்தைக்கு பாலசுப்ரமணியம் என்று பெயரிட்டனர்.

ஸ்வர்ணலதா

போறாளே பொன்னுதாயி பாடியவள் போயே விட்டாள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் போன்ற இசை அமைப்பாளர்களை தொடர்ந்து தேனிசை தென்றல் தேவாவுக்கு தொடர்ந்து பாடினார். இவரின் சிறப்பான பாடல்கள் பல தேவா இசையில் வெளியானது. மேலும் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா போன்ற எல்லாருடனும் பணி புரிந்தார்.