Direkt zum Hauptbereich
இன்று பொன்விழா காணும் இசைக்குயிலுக்கு வாழ்த்துக்கள்!
சின்னகுயில் சித்ரா என்றாலே இனிய குரலும், மலர்ந்த சிரிப்புமே நமக்கு நினைவில் வரும். 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் மேடை பாடகராக விளங்கிய கிருஷ்ணன் நாயருக்கும் வீணை மேதை சாந்தகுமாரிக்கும் இளைய மகளாக கேரளா திருவனந்தபுரத்தில் சித்ரா பிறந்தார்.


5 வயதிலேயே ரேடியோவில் பாடி புகழ் பெற்றார். பின்னர் கே.ஜே.ஏசுதாசுடன் மேடையிலும் தரங்கிணி இசை தட்டுகளிலும் பாடி புகழ் பெற்றார். பி.பி.ஸ்ரீனிவாசுடன் குஷி ஔர் குஷி என்ற ஹிந்தி படத்தில் முதல் பாடல் சென்னை வந்து பாடினார். அந்த பாடல் வெளிவரவே இல்லை. பின்னர் கே.ஜே.ஏசுதாசு சிபாரிசால் இளையராஜா அவர்கள் இசையில் முதல் பாடலாக நீ தானா அந்த குயில் படத்தில் இரு பாடல்கள் பாடினார். பூஜைக்கேத்த பூவிது, கண்ணான கண்ணா உன்ன என்ன சொல்லி" இந்த இரு பாடலும் பெரும் ஹிட் ஆக அன்றிலிருந்து இன்றுவரை இந்திய மொழிகள் அனைத்திலும் பிஸியாக பாடிகொண்டிருக்கிறார். வங்காள, ஒரிய, படுகா, பஞ்சாபி உட்பட 15 மொழிகளில் பாடிக்கொண்டே இருக்கிறார்.

எண்ணற்ற கர்நாடகா, மெல்லிசை, பக்தி பாடல்களும் பாடி உள்ளார். யாருமே வாங்காத அளவு 6 முறை தேசிய விருதும், 15 முறை கேரள அரசு விருதும், 6 முறை ஆந்திர அரசின் நந்தி விருதும், 5 முறை தமிழக அரசு விருதும், 2 முறை கர்நாடகா அரசு விருதும், கலைமாமணி விருதும் பெற்றவர். உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்சிகளிலும் பெருமளவு பங்கேற்றவர். 

இளையராஜா, கே.வி.மகாதேவன், ரஹ்மான், தேவா, எம்.எஸ்.விஸ்வநாதன், சந்திரபோஸ், சிற்பி, மரகதமணி, சலீல் சௌத்ரி, பாலபாரதி, வி.குமார், எஸ்.பி.பி, தி.ராஜேந்தர், பாக்கியராஜ், வி.எஸ்.நரசிம்மன், எல்.வைத்தியநாதன், ஆர்.டி.பர்மன், பப்பிலஹரி, லக்ஸ்மிகாந்த் பியாரிலால், தேவேந்திரன், ஹம்சலேகா என இந்திய இசை அமைப்பாளர்கள் எல்லோரிடமும் பாடி இருக்கிறார். எல்லா முன்னணி பாடகர், பாடகிகளுடன் பாடி உள்ளார். கர்நாடக, இந்துஸ்தானி பாடல்களில் நல்ல தேர்ச்சி பெற்றவர். 

32 ஆண்டுகள், 15000 ஆயிரம் பாடல்கள், எண்ணற்ற விருதுகள் தொடர்கிறது சின்னகுயிலின் பயணம். சென்னை சாலிகிராமம் ஸ்ருதி இல்லத்தில் தன கணவர் விஜயசங்கரோடு வசித்து வருகிறார். விஜயசங்கர் ஒரு பொறியியல் வல்லுநர். சித்ராவின் உடன்பிறந்தோர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள தொலைக்காட்சி இசை நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார். நல்ல பாடல்களை மட்டுமே தேர்வு செய்து பாடி வருகிறார். அளப்பரிய சாதனை புரிந்தும் அடக்கமான கலைஞராக வாழ்கிறார். எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்..

Kommentare

Beliebte Posts aus diesem Blog

ஜிக்கி

ஜிக்கி அருள்தாரும் தேவமாதாவே - ஞான சௌந்தரி.. வாராய் நீ வாராய் - மந்திரி குமாரி  ராஜசேகரா என் மேல் மோடி செய்வதேனடா - அனார்கலி  மானைத் தேடி மச்சான் வரப் போறான் - நாடோடி மன்னன் மயக்கும் மாலைப்பொழுதே குலேபகாவலி ஊரெங்கும் தேடினேன் ஒருவரை - தேனிலவு  துள்ளாத மனமும் துள்ளும் - கல்யாண பரிசு  நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்
  இளையராஜாவுக்கு யார் போட்டி ? ** தேரோட்டம் நடக்கும் சாலை என்றாலும் அதிலும் எல்லா வண்டிகளும் போகத்தானே செய்யும் ? இளையராஜா திரையிசையமைப்பில் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் அவரோடு போட்டி போட்டு இசையமைத்தவர்கள்