தனுஷ் - சிம்பு இடையே ஹன்ஸிகா!
நடிகர் தனுஷுக்கும், சிம்புவிற்கும் இடையே நிலவிய போட்டிகளெல்லாம் மலையேறி, இப்போது தனுஷ் பிறந்தநாளுக்கு சிம்பு பார்ட்டி கொடுப்பதும், வெளிநாட்டிற்கு சென்றால் ஒரே விமானத்தில் செல்வது என நட்பு பாராட்டிக்கொண்டிருக்கின்றனர் தனுஷும் சிம்புவும்.
இயக்குனர் சற்குனம் இயக்கத்தில் தனுஷ் ’சொட்ட வாளக்குட்டி’ என்ற படத்தில் நடிக்கிறார். இயக்குனர் சற்குணமும், தனுஷும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால் தமிழ்த் திரையுலகத்தில் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் ஹன்ஸிகா இந்த படத்தில் நடிப்பது பற்றி பேசப்படுவது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ”பாக்க பாக்க புடிக்கிற” ஹீரோவுடனும் “பாத்தாலே புடிக்கும்” ஹீரோவுடனும் ஒரே நேரத்தில் நடிக்கவிருக்கிறார் ஹன்ஸிகா.
Keine Kommentare:
Kommentar veröffentlichen