Freitag, 19. Oktober 2012

ஆஸ்கார் போட்டியில் தமிழ்ப்படங்கள்!



ஆஸ்கார் போட்டியில் தமிழ்ப்படங்கள்!


ஒவ்வொரு வருடமும் ரிலீஸாகும் சிறந்த படங்களை ஒவ்வொரு பிரிவுகளாக வகைப்படுத்தி அந்தந்த பிரிவில் சிறந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும். 

      
இந்திய மொழிப்படங்களை ஆஸ்கார் குழு ’சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம்(Best Foreign Film)’ என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தி விருது வழங்கும். 

இந்த வருடம் வெளியான சிறந்த படங்களை ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்க 16 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது ஆஸ்கார். இந்த வார இறுதியில் ஆஸ்காரின் குழு படங்களை பார்த்து தேர்வு செய்ய உள்ளது. அந்த வரிசையில் தமிழிலிருந்து ஏழாம் அறிவு, வழக்கு எண் 18/9 ஆகிய படங்கள் இருக்கின்றதாம். 

புதுமையான கதைகள் என ஆஸ்கார் குழுவினர் இந்த படங்களை பாராட்டியுள்ளனர். இந்திய அளவில் இந்தி படங்களான ‘தி டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’, ‘கேங்ஸ் ஆஃப் வேசிபூர்’ ஆகிய படங்களும், தெலுங்கில் ‘ஈகா’ படமும் ஆஸ்கார் குழுவினரின் பார்வையில் இருக்கிறதாம். 

கோச்சடையானா? அலெக்ஸ்பாண்டியனா



கோச்சடையானா? அலெக்ஸ்பாண்டியனா? 


நடிகர் கார்த்தி தென்னிந்திய திரையுலக ரசிகர்களை குறுகிய காலத்தில் கவர்ந்த நடிகர். தமிழ் படங்களுக்கு நிகராக தெலுங்கு, மலையாளம் மொழிகளில் ரசிகர்கள் கார்த்திக்கு உண்டு. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா நடித்துள்ள அலெக்ஸ்பாண்டியன் படம் வருகிற 
தீபாவளிக்கு ரிலீஸாகிறது.
 

தீபாவளிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படமும் ரிலீஸாவதால், இவ்விரு படங்களில் வசூலை அள்ளி குவிக்கப் போவது எந்த படம்? என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வந்தது. ரஜினி நடிப்பில் டிசம்பர் 12-ஆம் தேதி கோச்சடையான் எவ்வித போட்டியும் இல்லாமல் தனியே உலகம் முழுவதும் ரிலீஸாகவிருந்தது. 

ஆனால் அலெக்ஸ் பாண்டியன் படம் ‘பேட் பாய்’ என்ற பெயரில் தெலுங்கில் டிசம்பர் 14-ஆம் தேதி ரிலீஸாவதால் தெலுங்கில் கோச்சடையானும், அலெக்ஸ்பாண்டியனும் மோதுகின்றன. தமிழில் விஜய் நடிக்கும் படத்துடனும், தெலுங்கில் ரஜினி நடிக்கும் படத்துடனும் ரிலீஸாகி வசூலை அள்ளுவாரா அலெக்ஸ் பாண்டியன்? என்பது ரசிகர்களின் கேள்வி. கடைசியாக கார்த்தி நடிப்பில் ரிலீஸான சகுனி படம் ரசிகர்களை ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது.

20 நிமிஷ படம் கட்! ’மாற்றான்’ பஞ்சாயத்து!



20 நிமிஷ படம் கட்! ’மாற்றான்’ பஞ்சாயத்து!


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இருவேடங்களில் நடித்து நேற்று(12.10.12) வெளிவந்த மாற்றான் படம் ரசிகர்களிடமிருந்து பலவகை விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் குறையாக பல ரசிகர்கள் பொதுவாக சொல்லும் குறை படத்தின் நீளம் தான். 

இந்நிலையில்''புட்டேஜ் அதிகமாக இருக்கு, 20 நிமிஷ படத்தை, கட்பண்ணிக்கொடுங்க'' என 'மாற்றான்' டிஸ்டிரிபியூட்டர்களும் தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்திடம் கோரிக்கை வைக்க, அகோரம் டைரக்டர் கே.வி.ஆனந்திடம் கோரிக்கை வைக்க பிடிவாதமாக மறுத்துவிட்ட ஆனந்த் (12.10.2012) செல்ஃபோனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாராம். 

வேறுவழி இல்லாமல் படம் ரிலீசான நேற்று நள்ளிரவு படத்தின் எடிட்டரை கூப்பிட்டு அகோரமே கட் பண்ணிவிட்டாராம். டென்ஷனான ஆனந்த் டைரக்டர் சங்கத்தில் பஞ்சாயத்து கூட்டப்போகிறாராம்.

தனுஷ் - சிம்பு இடையே ஹன்ஸிகா!


தனுஷ் - சிம்பு இடையே ஹன்ஸிகா!


நடிகர் தனுஷுக்கும், சிம்புவிற்கும் இடையே நிலவிய போட்டிகளெல்லாம் மலையேறி, இப்போது தனுஷ் பிறந்தநாளுக்கு சிம்பு பார்ட்டி கொடுப்பதும், வெளிநாட்டிற்கு சென்றால் ஒரே விமானத்தில் செல்வது என நட்பு பாராட்டிக்கொண்டிருக்கின்றனர் தனுஷும் சிம்புவும். 

சிம்பு நடித்துக்கொண்டிருக்கும் வேட்டைமன்னன், வாலு ஆகிய படங்களில் ஹன்ஸிகா மொத்வானி தான் ஹீரோயின். 
ஹன்ஸிகாவுடன் நடிப்பது எனக்கு பொருத்தமாக இருக்கிறது என சமீபத்தில் சிலாகித்திருந்த சிம்பு, தனது நெருங்கிய நண்பரான தனுஷிடமும் கூறியதன் பலனாகத் தான் தனுஷின் படத்திலும் ஹன்ஸிகா நடிக்கிறாராம். 

இயக்குனர் சற்குனம் இயக்கத்தில் தனுஷ் ’சொட்ட வாளக்குட்டி’ என்ற படத்தில் நடிக்கிறார். இயக்குனர் சற்குணமும், தனுஷும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால் தமிழ்த் திரையுலகத்தில் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.  இந்நிலையில் ஹன்ஸிகா இந்த படத்தில் நடிப்பது பற்றி பேசப்படுவது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ”பாக்க பாக்க புடிக்கிற” ஹீரோவுடனும் “பாத்தாலே புடிக்கும்” ஹீரோவுடனும் ஒரே நேரத்தில் நடிக்கவிருக்கிறார் ஹன்ஸிகா.

உதயநிதியின் அடுத்த படம்!


உதயநிதியின் அடுத்த படம்!


இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடித்து வெளிவந்த ஓகே ஓகே படம் சூப்பர் ஹிட் ஆனது. உதயநிதி நடித்த முதல் படம் வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்த படம் எது? என்ற கேள்வி உதயநிதியைச் சுற்றி வந்தது. 

      
“இயக்குனர் சொன்னதைத் தான் நான் செய்தேன்.  அடுத்த படம் 
பற்றி இப்போது முடிவு செய்யப்படவில்லை. எனக்கு ஏற்ற கதை வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்று கூறியிருந்தார் உதயநிதி. சமீபத்தில் வெளிவந்த சுந்தரபாண்டியன் பட இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பதாக பேசப்பட்டு வந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.  

இயக்குனர் பிரபாகரன் ரெட் ஜியண்ட் மூவீஸ்க்கு படம் இயக்குவதாகவும் அந்த படத்தில் உதயநிதி நடிப்பதாகவும் தனது டுவிட்டர் வலைதளத்தில் இன்று(16.10.12) கூறியிருக்கிறார் உதயநிதி. ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாகவும், மற்ற நடிகர்கள் டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

விமல் தள்ளாட்டம்! ஹீரோயின் திண்டாட்டம்!



விமல் தள்ளாட்டம்! ஹீரோயின் திண்டாட்டம்!


ரெண்டாவது படம், சில்லுனு ஒரு சந்திப்பு, மூன்று பேர் மூன்று காதல், மஞ்ச பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கூத்து என 6 படங்களை கைவசம் வைத்துள்ளார் களாவானி விமல். 6 படங்களில் பெரும்பாலானவை டபுள் ஹீரோ நடிக்கும் படங்கள். விமல் பிரசன்னாவுடன் நடிக்கும் கூத்து திரைப்படம் காமெடி கலந்த அட்வென்சர் படமாக அடர்ந்த காடுகளில் எடுக்கப்பட்டு வருகிறது. 

      
கூத்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வெளுத்துக்கட்டு படத்தில் 
நடித்த அருந்ததி நடிக்கிறார். படப்பிடிப்பிற்காக கேரள காட்டுப்பகுதிகளில் தங்கி ஷூட்டிங் நடந்த்தி வருகின்றனர் கூத்து படக்குழுவினர். இந்நிலையில் படப்பிடிப்பு முடித்துவிட்டு ஓட்டல் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அருந்ததிக்கு நடிகர் விமல் ஃபோன் செய்து ஒரு மாதிரியாக பேசினாராம். 

ஃபோனை கட் செய்து விட்டு ஓட்டலில் இருந்த அருந்ததியின் ரூமுக்கே சென்று அவரிடம் விமல் தவறாக நடக்க முயன்றாராம். அதன் பிறகு எப்படியோ சமாளித்துவிட்டு எஸ்கேப் ஆன அருந்ததி இயக்குனரிடம் நடந்ததை விவரித்திருக்கிறார். அப்போதைக்கு சுமூகமாக பேசித் தீர்த்துவிட்ட இந்த பிரச்சனையை சென்னைக்கு திரும்பியதும் அருந்ததி போட்டு உடைக்க கோடம்பாக்கமே இந்த தீண்டலை அலசிக் கொண்டிருக்கிறது.

ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சீன அரசு



ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சீன அரசு!


நண்பன் படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிக்கொண்டிருக்கும் படம் ’ஐ’. விக்ரம், ஏமி ஜாக்சன், சந்தானம், பவர்ஸ்டார் என பல நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் ஐ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

சில காட்சிகளை சென்னையில் எடுத்துவிட்டு அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு சமீபத்தில் 
கிளம்பியது ஐ படக்குழு.  ஐ படத்தின் பெரும்பகுதியை சீனாவில் எடுக்க முடிவெடுத்து, ஐ படக்குழு சார்பில் சீனா அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். 

ஆனால் ஷங்கர் கேட்டதில் சீனாவின் சில முக்கிய இடங்களில் படமெடுக்க அனுமதிக்க முடியாது என கூறிவிட்டதாம் சீன அரசு. எனவே தனது திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி சில காட்சிகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறாராம் ஷங்கர்.




த்ரிஷாவிற்கும் ராணாவிற்கும் நிச்சயதார்த்தம்?


கோலிவுட், டோலிவுட் என இரண்டு திரையுலகிலும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு செய்தி த்ரிஷா-ராணா நிச்சயதார்த்தம் நடந்ததா? என்பது தான். பல நாட்களாக காதல் என பேசப்பட்டு வந்த த்ரிஷா-ராணாவின் பழக்கம் திடீரென மோதலால் பிரிந்தது. எவ்வளவு வேகத்தில் பிரிந்தார்களோ அதைவிட வேகமாக மறுபடியும் ஒட்டிக்கொண்டனர் ராணாவும் த்ரிஷாவும்.

‘எங்களுக்குள் காதல் இல்லை’ என இவர்கள் மறுத்ததால், காதல் என்ற செய்தி இப்போது நிச்சயதார்த்தமாகிவிட்டது. சமீபத்தில் 
ராணா-த்ரிஷா உறவினர்களின் முன்னிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பிளாட்டின மோதிரத்தை ராணா, த்ரிஷாவிற்கு அணிவித்ததுடன் ஒரு காஸ்ட்லியான நகைப்பெட்டியையும் கொடுத்தார் என்பது தான் அந்த செய்தி. 

இதுபற்றி கேட்டபோது த்ரிஷா “எனக்கு ராணாவை திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை எனும்போது நிச்சயதார்த்தம் நடந்ததா எனக் கேட்டால் என்ன அர்த்தம்?’ என கொதிக்கிறார். ராணாவுக்கு 500 கோடி ரூபாய் சொத்து, த்ரிஷா எதிர்பார்த்த மாதிரியான மணமகன், நீண்ட நாள் பழக்கம் என பல செய்திகள் வந்தாலும் த்ரிஷா வாய் திறந்து சொன்னால் தான் உண்மை தெரியவரும்.