Direkt zum Hauptbereich
ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் காயக்வாட் (பிறப்பு: டிசம்பர் 12, 1950), மராட்டியில்: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாஜீராவ் காயகவாட்) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.
பொருளடக்கம் [மறை]
1 இளமை
2 திரைப்படங்களில்
3 ரசிகர்களிடம் வரவேற்பு
4 அரசியல் தொடர்பு
5 குடும்பம்
6 நடித்துள்ள திரைப்படங்கள்
7 வெளி இணைப்புகள்
[தொகு]இளமை

ரஜினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.
[தொகு]திரைப்படங்களில்

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரசினிகாந்து, ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரசினிகாந்து நிரூபித்தார். ரசினிகாந்து நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.
1980களில் ரசினிகாந்து நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவநத்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகியும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜி உம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவருடைய நண்பரும், மற்றொரு சிறந்த நடிகருமான கமலஹாசன் பெரும்பாலும் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்கையில் ரசினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாகவே உள்ளன. தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி ஆகிய மொழிகளிலும் 170 திரைப்படங்களில் ரசினிகாந்து நடித்துள்ளார்.
[தொகு]ரசிகர்களிடம் வரவேற்பு

ரசினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இப்பொழுது அகிலமே அவருடைய அடுத்த படமான எந்திரன்னுக்காக காத்து கொண்டிருகின்றது.
[தொகு]அரசியல் தொடர்பு

படிமம்:Rajni-with-Kalignar.JPG
Rajinikanth with Tamil Nadu Chief Minister M. Karunanidhi in 1996
1990களில் ரசினிகாந்து நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. எனினும், இக்காரணி தேர்தல் புள்ளியியலாளர்களால் உறுதியிட்டுக் கூறப்படவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில், ரசினிகாந்து எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை.2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரசினிகாந்து அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். ரசினி 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார்.
[தொகு]குடும்பம்

16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். பின்னர் இருவரும் ஐசுவர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்களைப் பெற்றனர். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு இளம் தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார்.

Kommentare

Beliebte Posts aus diesem Blog

ஸ்வர்ணலதா

போறாளே பொன்னுதாயி பாடியவள் போயே விட்டாள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் போன்ற இசை அமைப்பாளர்களை தொடர்ந்து தேனிசை தென்றல் தேவாவுக்கு தொடர்ந்து பாடினார். இவரின் சிறப்பான பாடல்கள் பல தேவா இசையில் வெளியானது. மேலும் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா போன்ற எல்லாருடனும் பணி புரிந்தார். 
மிரட்டும் செளந்திரவல்லி! ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் "செளந்திரவல்லி'. நடிகைகள் மதுபாலா, மகேஸ்வரி, சுதா சின்னத்திரை பண்டிட்ஸ்! சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து தங்களது திறமையை வெளிப்படுத்திய நடிகர், நடிகைகளுக்குத் தங்களது பாடும் திறமையை வெளிப்படுத்தவும்  ஆட்களைத் தேடும் ஹரிஹரன்! இந்திய இசையில் சர்வதேச புகழ் பெற்ற ஹரிஹரன்,​​ தனது இசை அகடமிக்காக ஐந்து பேரை ஜெயா தொலைக்காட்சியில் மிகப்பெரிய "ரியாலிட்டி ஷோ' நடத்தி தேர்ந்தெடுக்க புதுப் படங்கள்! நடிகர் விஜயகாந்தின் "கேப்டன் டி.வி.' வருகிற ஏப்ரல் 14ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்குகிறது.​ இதற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்த "விதை'யில் சூர்யா! கடந்த பொங்கல் தினத்தன்று விஜய் டி.வி.யில் "ஒரு விதை - ஒரு கோடி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. "விதை' என்ற அந்தத் திட்டம் மூலம் நடிகர் சூர்யாவின் நெகிழ வைக்கும் மகான்! இந்த பூமியில் பிறக்கும் அனைத்து பிறப்புக்கும்  காரணம் உண்டு. மிகச் சிலரே தங்களது பிறப்பின் ரகசியங்களை