Direkt zum Hauptbereich
த்மினி (ஜூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.
பொருளடக்கம் [மறை]
1 வாழ்க்கைக் குறிப்பு
2 கலையுலக வாழ்வு
3 விருதுகள்
4 இறப்பு
5 குறிப்பிடத் தக்க திரைப்படங்கள்
6 குறிப்புகளும் மேற்கோள்களும்
7 வெளி இணைப்புக்கள்
[தொகு]வாழ்க்கைக் குறிப்பு

திருவனந்தபுரத்தில் பீஜாப்பூரில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவரது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977ல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.
[தொகு]கலையுலக வாழ்வு

பத்மினி, நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். 17 வயதில் திரையுலகில் புகுந்தார். கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் தோன்றிய[1] பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். தமிழில் முதன் முதலில் வேதாள உலகம் படத்தில் நாட்டியம் ஆடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த "மணமகள்" என்ற படம் தான் அவரது முதல் தமிழ்த் திரைப்படம். தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகானாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.
[தொகு]விருதுகள்

சிறந்த நடிகை விருது (Film Fans Association in 1954, 1959, 1961 and 1966)
கலைமாமணி விருது (தமிழ் நாடு அரசு, 1958)
The Best Classical Dancer Award from Moscow Youth Festival in 1957.
பிலிம் பெயார் விருது (1985).
சோவியத் ஒன்றியம் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
[தொகு]இறப்பு

பத்மினி, செப்டம்பர் 24, 2006 அன்று இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

Kommentare

Beliebte Posts aus diesem Blog

ஸ்வர்ணலதா

போறாளே பொன்னுதாயி பாடியவள் போயே விட்டாள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ரஹ்மான் போன்ற இசை அமைப்பாளர்களை தொடர்ந்து தேனிசை தென்றல் தேவாவுக்கு தொடர்ந்து பாடினார். இவரின் சிறப்பான பாடல்கள் பல தேவா இசையில் வெளியானது. மேலும் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா போன்ற எல்லாருடனும் பணி புரிந்தார். 
மிரட்டும் செளந்திரவல்லி! ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர் "செளந்திரவல்லி'. நடிகைகள் மதுபாலா, மகேஸ்வரி, சுதா சின்னத்திரை பண்டிட்ஸ்! சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து தங்களது திறமையை வெளிப்படுத்திய நடிகர், நடிகைகளுக்குத் தங்களது பாடும் திறமையை வெளிப்படுத்தவும்  ஆட்களைத் தேடும் ஹரிஹரன்! இந்திய இசையில் சர்வதேச புகழ் பெற்ற ஹரிஹரன்,​​ தனது இசை அகடமிக்காக ஐந்து பேரை ஜெயா தொலைக்காட்சியில் மிகப்பெரிய "ரியாலிட்டி ஷோ' நடத்தி தேர்ந்தெடுக்க புதுப் படங்கள்! நடிகர் விஜயகாந்தின் "கேப்டன் டி.வி.' வருகிற ஏப்ரல் 14ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவங்குகிறது.​ இதற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்த "விதை'யில் சூர்யா! கடந்த பொங்கல் தினத்தன்று விஜய் டி.வி.யில் "ஒரு விதை - ஒரு கோடி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. "விதை' என்ற அந்தத் திட்டம் மூலம் நடிகர் சூர்யாவின் நெகிழ வைக்கும் மகான்! இந்த பூமியில் பிறக்கும் அனைத்து பிறப்புக்கும்  காரணம் உண்டு. மிகச் சிலரே தங்களது பிறப்பின் ரகசியங்களை