ஜானகி அம்மா 1957ல் வெளியான விதியின் விளையாட்டு படத்தில் முதன் முதலாக பாடியதுடன், காரைக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் நாதஸ்வரத்துடன் தனிக்குரலாய் சிங்கார வேலனே தேவா பாடலாகட்டும், தூக்கம் உன் கண்களை, ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி என சில பாடல்கள் பாடியிருந்தாலும் முதன் முதலில் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அவரை கொண்டு சேர்த்தது அன்னக்கிளி படத்தில் அவர் பாடிய 3 முத்தான பாடல்கள் என்று தான் சொல்லனும். கூகலூர் (கோபியில் இருந்து 8 கி.மி) என்ற கிராமத்தில் இருந்த ராஜா திரையரங்கில் 6.30 மணிக்கு ஒலிக்க ஆரம்பிக்கும் பாடல்களில் கடைசி பாடலாக 7.20 மணி அளவில் சிங்கார வேலனே தேவா பாடல் தான் பாடி முடிவு பெறும். அந்த பாடல் பாடி ஒலித்த பின் சரியாக 7.30 மணிக்கு படம் போடுவார்கள்.. அன்றைய காலகட்டங்களில் கிராமப்புற தியேட்டர்களில் படம் போடுவதற்கான ஒரு குறியீடாகவே இந்த பாடல் ஒலிக்கும் அளவு பிரசித்தி பெற்றது. அன்னக்கிளி படம் வெளியான பிறகு நகர்ப்புற பெண்களின் உதடுகளில் “அன்னக்கிளி உன்னை தேடுதே” பாடலின் முனுமுனுப்பும், கல்யாண வீடுகளில் “சுத்த சம்பா பச்ச நெல்லு குத்த தான் வேணும்” பாடலும், கிராமப் புரத்து மாந்தரி
தமிழ் சினிமா THAMIL CINEMA